செய்திகள்

ஏபி டி வில்லியர்ஸ்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய ரசிகர்கள்- ஏன் தெரியுமா?

Published On 2018-07-20 16:32 GMT   |   Update On 2018-07-20 16:32 GMT
ஏபி டி வில்லியர்ஸ்க்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். #ABD #DeVilliers
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி கலக்கியவர் டி வில்லியர்ஸ். அவருக்கு தென் ஆப்பரிக்காவில் ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ இந்தியாவில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்தியாவில் டி வில்லியர்ஸின் ஆட்டத்தை அவ்வளவு ரசித்து பார்ப்பார்கள். மேலும் அவர் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

ஆனால் டிவில்லியர்ஸ் இன்ஸ்டாகிராமில் போட்ட ஒரு பதிவின் காரணமாக இந்தியர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார். அப்படி என்ன பதிவை போட்டார் டிவில்லியர்ஸ்? ஒரு மது தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய ஒயின் பாட்டில் விற்பனைக்கு வரவுள்ளதாக விளம்பரப்படுத்தியிருந்தது.

ஒயின் விளம்பரத்தில் ஆட்டோ மீது ஒயின் பாட்டிலை வைத்து ‘Eagle has landed’  என குறிப்பிடப்பட்டிருந்தது. இது எல்லாம் சரிதான், ஆனால் விளம்பரத்தின் கீழே இந்திய தேசியக் கொடியை வைத்துவிட்டது. இந்த விளம்பரத்தை பிரபலப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதற்குதான் இந்திய ரசிகர்கள் டி வில்லியர்ஸை காய்ச்சு எடுத்துவிட்டனர்.



அதில் சிலர் தென் ஆப்பிரிக்காவில் உங்களை போன்ற ஒரு வீரர் இருக்கிறார். அவரின் பெயர் ஹசிம் ஆம்லா, அவர் தன்னுடைய சம்பளத்தில் இருந்து 50 சதவிதத்தை மதுபாட்டிலை விளம்பரம் செய்யாத ஜெர்ஸிக்காக கட்டினார். ஆனால் நீங்களோ உயிரை குடிக்கும் மதுவை விளம்பரம் செய்கிறீர்கள் மேலும் சிலர்  தேசியக் கொடியை தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள். இப்படி நீங்கள் செய்யக் கூடாது. எங்கள் நாட்டின் பெருமையை குலைக்கும் செயல் இது என கருத்திட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News