செய்திகள்

யுஎஸ் கிராண்ட் ஸ்லாம்- சாம்பியன் பட்டம் பெறுவோருக்கு தலா 3.8 மில்லியன் டாலர் பரிசு

Published On 2018-07-18 15:28 GMT   |   Update On 2018-07-18 15:28 GMT
அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் நபர்களுக்கு தலா 3.8 மில்லியன் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #USOpen
டென்னிஸ் தொடரில் மிகவும் உயர்ந்த தொடராக கிராண்ட் ஸ்லாம் கருதப்படுகிறது. நான்கு தொடர்களில் ஒன்று அமெரிக்கா ஓபன். இந்த வருடத்திற்கான அமெரிக்கா ஓபன் அடுத்த மாதம் 27-ந்தேதி தொடங்குகிறது.

இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு 3.8 மில்லியன் அமெரிக்கா டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இதே தொகை பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு சாம்பியனுக்கு வழங்கப்படும் என்று அமெரிக்கா டென்னிஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது.



அதேபோல் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஜோடிக்கு 7 லட்சம் டாலர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 53 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. 2013-ம் ஆண்டிற்குப் பிறகு 57 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News