செய்திகள்

பிங்க் பால் டெஸ்ட் இல்லாத ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் தொடர்

Published On 2018-06-21 11:43 GMT   |   Update On 2018-06-21 11:43 GMT
கடந்த 6 சீசனில் முதன்முறையாக பிங்க் பால் டெஸ்ட் இல்லாமல் ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. #CricketAustralia
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபியை போல், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர் ஷெஃப்பீல்டு ஷீல்டு. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் தேசிய அணியில் இடம்பெறுவார்கள்.

இந்த வருடத்திற்கான தொடர் வரும் அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்குகிறது. இது ஐந்து சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் புதிய முயற்சி செய்ய விரும்பினால், இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ளும்.



பிங்க் பந்தில் நடத்தப்படும் பகல்-இரவு டெஸ்டிற்கு ஆஸ்திரேலியா அணி தயாராகும்போது இந்த தொடரில் பெரும்பாலான ஆட்டங்கள் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றன. ஆனால் இந்தமுறை ஒரு போட்டி கூட பிங்க் பந்தில் நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக முதல் பாதி சீசன் ரெட் பந்திலும், 2-வது பாதி சீசன் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் டியூக்ஸ் பந்தும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஜேஎல்டி ஒருநாள் கோப்பை தொடர் செப்டம்பர் 16-ந்தேதி தொடங்குகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன.
Tags:    

Similar News