செய்திகள்

சர்வதேச டென்னிஸ் தரவரிசை- 84-வது இடத்தில் யூகி பாம்ப்ரி

Published On 2018-06-12 10:45 GMT   |   Update On 2018-06-12 10:45 GMT
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான யூகி பாம்ப்ரி சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 84-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டென்னிஸ் வீரர்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னணி வீரரான யூகி பாம்ப்ரி 93-வது இடத்தில் இருந்து 84-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 14 இடங்கள் முன்னேறி 169-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

யூகி பாம்ப்ரி பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றோடு வெளியேறினாலும், சர்பிட்டோன் சேலஞ்சர் தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார். இதனால் 30 புள்ளிகள் கிடைத்தது. இதன்மூலம் 9 இடங்கள் முன்னேறினார்.



ராம்குமார் ராமநான் 7 இடங்கள் பின்தங்கி 128-வது இடத்திலும், சுமித் நகல் 14 இடங்கள் பின்தங்கி 234-வது இடத்திலும் உள்ளனர்.

இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா 22-வது இடத்திலும், திவிஜ் ஷரன் 43-வது இடத்திலும், லியாண்டர் பயஸ் 59-வது இடத்திலும், புரவ் ராஜா 77-வது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News