செய்திகள்

போதை மருந்து உட்கொண்டு தடைபெற்ற பெரு கேப்டன் உலகக் கோப்பையில் விளையாட அனுமதி

Published On 2018-05-31 14:17 GMT   |   Update On 2018-05-31 14:17 GMT
போதை மருந்து உட்கொண்டு தடைபெற்ற பெரு கேப்டன் உலகக் கோப்பையில் விளையாட விளையாட்டுக்கான நடுவர் மன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெரு நாட்டு கால்பந்து அணி கேப்டன் பவுலோ கியூரெரோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினாவிற்கு எதிரான விளையாடும்போது டீயில் கோகைன் போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

விசாரணையில் சுவிட்சர்லாந்து பெடரல் கோர்ட் அவருக்கு 6 மாதம் தடைவிதித்தது. இந்த தடை ஜூன் 4-ந்தேதியுடன் முடிவுக்கு வந்துவிடும். இதனால் ரஷியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் விளையாட தகுதிப் பெற்றார்.

ஆனால், மேல்முறையீட்டில் அவரது தண்டனை 14 மாதமாக அதிகரிக்கப்பட்டது. இதனால் உலகக் கோப்பையைில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் பவுலோ மேல்முறையீடு செய்தார். அதில் தனது 2-வது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு விளையாட்டுக்கான நடுவர் மன்றம் அனுமதி வழங்கியது. இதனால் உலகக் கோப்பையில் பவுலோ கியூரெரோ விளையாடுவதற்கான தடை நீங்கியுள்ளது.
Tags:    

Similar News