என் மலர்
நீங்கள் தேடியது "Fifa World Cup"
- சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- காங்கிரசின் முன்னாள் தலைவர், தற்போதைய தலைவரும் அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு மோதின. இந்த போட்டியில் 90 நிமிடங்கள் ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.
அதன்பின், பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தப் போட்டி மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக நினைவுகூரப்படும். உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவுக்கு வாழ்த்துகள்! இந்த கால்பந்து தொடர் முழுவதும் அவர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்கள் இந்த அற்புதமான வெற்றியில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்! என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், உலக கோப்பை கால்பந்து போட்டியில் உற்சாகமான செயல்திறனுக்காக பிரான்சுக்கு வாழ்த்துகள்! அவர்கள் இறுதிப் போட்டியில் தங்கள் திறன் மற்றும் விளையாட்டுத் திறமையால் கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்தனர் என பிரான்சு அணிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், உலக கோப்பை வென்ற அர்ஜென் டினா அணிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்பொதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
- 2வது பாதியில் பிரான்ஸ் 2 கோல்கள் அடிக்க ஆட்டம் சமனிலை அடைந்தது.
கத்தார்:
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.
முதல் பாதியில் அர்ஜென் டினா 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் 3-3 என சமனிலை பெற்றன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை 3வது முறையாக கைப்பற்றியது.
இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.
இரண்டாவது இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு ரூ.244 கோடி பரிசாக அளிக்கப்படுகிறது.
- அதிக கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார்.
- அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.
கத்தார்:
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார்.
அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.
- பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி முதல் கோல் அடித்தார்.
- முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
கத்தார்:
கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. கோப்பையைக் கைப்பற்றும் இந்த போட்டியில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதின.

ஆட்டம் தொடங்கிய 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்சி தனது அணிக்கான முதல் கோலை அடித்து அந்நாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து 36-வது நிமிடத்தில் ஏஞ்சல் டிமெரியா அர்ஜென்டினாவிற்கான 2-வது கோலை அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெடினா முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் முயற்சியை பிரான்ஸ் வீரர்கள் தீவிரப்படுத்தினர். அதன்படி 80-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் மீண்டும் அவர் தமது அணிக்கு மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையை எட்டியது.

இதையடுத்து முதல் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவதாக கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. 108வது நிமிடத்தில் மெஸ்சி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. 118-வது நிமிடத்தில் எம்பாப்பே தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார்.
இதையடுத்து இரு அணிகளும் 3-3 சமனிலை பெற்றன. எம்பாப்பே ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார்.
மூன்றாவது கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்றாவது முறையாக அர்ஜென்டினா உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.
- இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.
- இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன் அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில் கால்இறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது.
லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்நிலையில், உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோத உள்ளன.
உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதிப்போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும்.
மெஸ்சியின் கடைசி உலக கோப்பை போட்டி இது என்பதால் கோப்பையை கையில் ஏந்துவாரா என அர்ஜென்டினா ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- அரையிறுதிச் சுற்றுக்கு 4 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
- இதில் இருந்து 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழைந்தன. நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன.
நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், காலிறுதி சுற்றுகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன. காலிறுதியில் வென்றதன் மூலம் அர்ஜென்டினா, குரோசியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை மறுதினம் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா, குரோசியா அணிகள் மோதுகின்றன. டிசம்பர் 14-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 2-வது அரையிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய அணிகளுக்கு குரோசியா, மொராக்கோ அணிகள் அதிர்ச்சி அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
- மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
- மொராக்கோ அணி இந்தத் தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3-வது காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மொராக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை என்ற குறையையும் தீர்த்துள்ளது.
- போர்ச்சுக்கல் வீரர்கள் அடித்த அனைத்து கோல்களையும் ரொனால்டோ கொண்டாடினார்.
- ரொனால்டோ இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.
தோஹா:
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், கோல் மெஷின் என அழைக்கப்படும் தலைசிறந்த வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோ (வயது 37), களமிறக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார்.
சுவிட்சர்லாந்துடனான போட்டி தொடங்கியபோது, தேசிய அணியில் இருந்து விலகப் போவதாக மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது. தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோசுடனான உரையாடலின்போது இதனை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் அணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு விளக்கம் அளித்தது. அதில், "கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த நேரத்திலும் கத்தாரில் தேசிய அணியை விட்டு வெளியேறுவதாக மிரட்டவில்லை. அவர் தேசிய அணிக்காகவும் நாட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சாதனையை உருவாக்குகிறார். இதை மதிக்க வேண்டும்" என கூறியிருந்தது.
இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரொனால்டோ குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டி நடைபெற்ற நாளில் மதிய உணவுக்குப் பிறகு ரொனால்டோவை எனது அலுவலகத்திற்கு அழைத்தேன். அவர் எப்போதும் ஆரம்பத்திலேயே களமிறங்கியதால், நான் எடுத்த முடிவு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.
இது ஒரு நல்ல யோசனை என்று நினைக்கிறீர்களா? என என்னிடம் கேட்டார். இந்த உரையாடல் சாதாரணமாகவே இருந்தது. நான் எனது கருத்துக்களை விளக்கினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார். வெளிப்படையாகவும் சாதாரணமாகவும் உரையாடினோம். அப்போது அவர் தேசிய அணியை விட்டு வெளியேற விரும்புவதாக என்னிடம் ஒருபோதும் கூறவில்லை.
அவர் தனது சக வீரர்களை ஊக்குவிக்க முடிவு செய்தார். மேலும் நாங்கள் அடித்த அனைத்து கோல்களையும் கொண்டாடினார். இறுதியில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சக வீரர்களை அழைத்தார். அவரை விட்டுவிடுங்கள். அவரை சுதந்திரமாக விட்டுவிட வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், 90 சதவீத கேள்விகள் அவரைப் பற்றியே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ரொனால்டோ இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரொனால்டோவுக்கு பதிலாக களமிறங்கிய ஸ்ட்ரைக்கர் கோன்கலோ ராமோஸ் (21) ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
எனினும், இன்று மொராக்கோவுடனான காலிறுதி ஆட்டத்தில் ரொனால்டோவுக்கான கதவு திறந்திருக்கிறது என பயிற்சியாளர் சான்டோஸ் தெரிவித்தார். இது வித்தியாசமான ஆட்டமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். எந்த வீரராக இருந்தாலும், களத்தில் இறக்கப்படாமல் மாற்று வீரராக வெளியில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்றும் பயிற்சியாளர் சான்டோஸ் தெரிவித்தார்.
- காலிறுதிச் சுற்றில் 8 நாடுகள் விளையாடுகின்றன.
- இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும். நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், நாக் அவுட் சுற்றுகள் நள்ளிரவுடன் முடிந்தது. நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை மறுதினம் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் குரோசியா, பிரேசில் அணிகள் மோதுகின்றன. டிசம்பர் 10-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது காலிறுதியில் மொராக்கோ, போர்ச்சுக்கல் அணியும், நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 3-வது காலிறுதியில் நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகளும் மோதுகின்றன. நான்காவது காலிறுதி டிசம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
- முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- இரண்டாம் பாதியிலும் போர்ச்சுக்கல் 4 ஒரு கோல் அடித்து அசத்தியது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் போர்ச்சுக்கலின் ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் போர்ச்சுக்கல் கோல் மழை பொழிந்தது. போர்ச்சுக்கலின் ராமோஸ் 51-வது நிமிடத்திலும், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், ராமோஸ் 67-வது நிமிடத்திலும், 92-வது நிமிடத்தில் ரபேல் லியோ தலா ஒரு கோல் அடித்தனர்.
சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.