search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உலக கோப்பையில் ஜாகிர் நாயக் பங்கேற்பு - இந்த விவகாரத்தை இந்தியா கவனிக்கும் என்கிறார் மத்திய மந்திரி
    X

    மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி

    உலக கோப்பையில் ஜாகிர் நாயக் பங்கேற்பு - இந்த விவகாரத்தை இந்தியா கவனிக்கும் என்கிறார் மத்திய மந்திரி

    • இந்தியாவால் தேடப்படும் நபரான ஜாகிர் நாயக் கத்தாருக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
    • இதுதொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து மத்திய மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மத வெறுப்புணர்வு பேச்சு, பணமோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டவர் ஜாகிர் நாயக். இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக் இந்தியாவில் இருந்து தப்பியோடி மலேசியாவில் தஞ்சம் அடைத்தார். ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது.

    இதற்கிடையே, ஜாகிர் நாயக் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்றுவரும் நிலையில் சாகிர் நாயக்கை கத்தார் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் கத்தாருக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருப்பது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து மத்திய மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இந்த விவகாரத்தை இந்தியா கவனிக்கும். மேலும், இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளும். ஆனால், ஜாகிர் நாயக் மலேசிய குடிமகன். ஜாகிர் நாயக் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு கடுமையாக எடுத்துரைக்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×