செய்திகள்

ஐபிஎல் தொடரில் அதிக ரன்- தேசிய அணியில் இடம்பிடிக்காத வீரர்களில் சூர்யகுமார் யாதவ் சாதனை

Published On 2018-05-14 11:55 GMT   |   Update On 2018-05-14 11:55 GMT
தேசிய அணியில் இடம்பிடிக்காத வீரர்கள் அதிக ரன்கள் குவித்ததில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் சாதனைப் படைத்துள்ளார். #IPL2018
ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது.

எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்த சூர்ய குமார் யாதவ், அதை சரியாகப் பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 473 ரன்கள் குவித்துள்ளார்.



இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடாட வீரர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2014-ல் மணிஷ் பாண்டே 401 ரன்கள் எடுத்திருந்தார். 2010-ல் சவுரப் திவாரி 419 ரன்கள் அடித்திருந்தார். 2012 மந்தீப் சிங் 432 ரன்களும், 2015-ல் ஷ்ரேயாஸ் அய்யர் 439 ரன்களும், 20110-ல் வல்தாட்டி 463 ரன்களும் அடித்திருந்தனர்.

இதில் பால் வல்தாட்டியைத் தவிர மற்ற வீரர்கள் இந்திய தேசிய அணியில் இடம்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News