செய்திகள்

ஐபிஎல் 2018 - கவுதம் காம்பீர் சாதனையை நெருங்கும் சுனில் நரைன்

Published On 2018-05-04 08:31 GMT   |   Update On 2018-05-04 08:31 GMT
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 8 முறை ஆட்டநாயகன் விருது பெற்று காம்பீர் சாதனையை நெருங்கி வருகிறார் சுனில் நரைன். #IPL2018 #KKRvCSK
ஐபிஎல் 2018 தொடரின் 33-வது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்யும்போது ஒரு கட்டத்தில் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் அடித்துக் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் சுனில் நரைன் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வாட்சன், அம்பதி ராயுடு விக்கெட்டுக்களை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன் உயர்வுக்கு அணை போட்டார்.



பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களம் சேஸிங் செய்யும்போது தொடக்க வீரராக களம் இறங்கிய சுனில் நரைன் 20 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் அடித்தார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

இதன்மூலம் 8 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர் 10 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். இன்னும் இரண்டு ஆட்டநாயகன் விருதை பெற்றால் கொல்கத்தா அணிக்காக அதிக முறை ஆட்ட நாயகன் விருதை பெற்ற காம்பீர் சாதனையை சமன் செய்வார்.
Tags:    

Similar News