செய்திகள்

ஸ்ரீசாந்த் அறிவுரையை பின்பற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சாளர்

Published On 2018-04-26 12:55 GMT   |   Update On 2018-04-26 12:55 GMT
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பஷில் தம்பி, தான் சோர்வடைவதுபோல் உணரும்போது, ஸ்ரீசாந்திடம் அறிவுரை கேட்பேன் என கூறியுள்ளார். #VIVOIPL #BasilThampi #Sreesanth

ஐதராபாத்:

கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் பஷில் தம்பி. வலதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்தாண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதுவரை 13 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 விக்கெட்கள் எடுத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் வளர்ந்துவரும் வீரர் விருது பெற்றார்.

இந்நிலையில், தான் சோர்வடைவது உணரும்போது, ஸ்ரீசாந்திடம் அறிவுரை கேட்பேன் என பஷில் தம்பி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் ஸ்ரீபாய் (ஸ்ரீசாந்த்) இடம் பேசுவேன். நான் சோர்வடைவது போல் உணரும் போது அவருக்கு மெஸ்சேஜ் செய்வேன், அவர் பதிலளிப்பார். குறிப்பிட்ட சில தருணங்களில் நான் எப்படி செயல்பட வேண்டும் அல்லது செயல்பட்டிருக்க வேண்டும் என அவர் அறிவுரை கூறுவார். அவர் எனக்கு தூண்டுதலாக இருப்பார்.

கடந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு, அனைவருக்கும் என்னை தெரியும். எனது பந்துவீச்சில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் தியோதர் கோப்பை, துலீப் கோப்பை, இந்தியா ஏ அணிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து பயிற்சி எடுக்குமாறு எம்எஸ்கே பிரசாத் எனக்கு மெஸ்சேஜ் அனுப்பினார்.

நான் யாருடனும் போட்டி போடவில்லை. எனது பந்துவீச்சை பற்றி எனக்கு நன்றாக தெரியும். என்னுடம் அந்த அளவு ஸ்விங் இல்லை. என்னால் முடிந்தது நல்ல லென்த்தில் வேகமாக பந்துவீச முடிந்தது மட்டுமே. நான் பந்துகளை தொடர்ந்து யார்கராக வீசியுள்ளேன். இந்த முறை எனது பந்துவீச்சு முறையை இரண்டு யார்கர் அதை தொடர்ந்து மிதவேக பந்து என மாற்ற முயற்சி செய்ய உள்ளேன். அதில் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறேன்.

இவ்வாறு பஷில் தம்பி கூறியுள்ளார். மேலும் பந்துவீச்சு பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்கிராத் அளித்த அறிவுறைகள் குறித்தும் அவர் பேசினார்.  #VIVOIPL #BasilThampi #Sreesanth
Tags:    

Similar News