செய்திகள்

2013-ல் சிஎஸ்கேவிற்கு எதிராக சதம், 2018-ல் சிஎஸ்கேவிற்காக சதம்

Published On 2018-04-21 11:14 GMT   |   Update On 2018-04-21 11:14 GMT
2013-ல் ராஜஸ்தான் அணியில் விளையாடிய வாட்சன் சென்னைக்கு எதிராக சதம் அடித்தார். நேற்று சென்னை அணிக்காக ராஜஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன். சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார். 37 வயதை நெருங்கும் வாட்சன் தனது ஆல்ரவுண்டர் திறமையால் தற்போதும் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.

2013-ம் ஆண்டு வாட்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சதம் அடித்தார். 2016 மற்றும் 2017 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாட்சன் விளையாடினார்.



இந்த வருட சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார்.

2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான வாட்சன் சதம் அடித்தார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வாட்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சதம் அடித்துள்ளார்.
Tags:    

Similar News