என் மலர்
நீங்கள் தேடியது "rajasthan royals"
- இளம் வீரரான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார்.
- ஜெய்ஷ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருபவர்களில் ஒருவர் ஜெய்ஷ்வால்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம் வீரரான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார். ஜெய்ஷ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார். அவரது சராசரி 48.08 ஆகும். ஸ்டிரைக்ரேட் 163.61 ஆக இருக்கிறது. ஒரு சதமும், 5 அரைசதமும் எடுத்து உள்ளார். 82 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடித்து உள்ளார். ஐ.பி.எல்.லில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ஜெய்ஷ்வால் 2-வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினால் அவரது ரன் குவிப்பு மேலும் அதிகமாகும்.
இந்நிலையில் ஐ.பி.எல்.போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஷ்வாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்ட னும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த சீசனில் ஜெய்ஷ்வால் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொழில்நுட்ப ரீதியான பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவர் 20 முதல் 25 பந்தில் 40 முதல் 50 ரன்கள் எடுக்கிறார். 15 ஓவர்கள் விளையாடினால் சதம் அடிக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்போது அணிகள் ஸ்கோர் 190 முதல் 200 ரன்கள் வரை குவிக்க இயலும்.
ஜெய்ஷ்வால் 20 ஓவர் போட்டிக்கு தயாராக இருக்கிறார். இதனால் இந்திய அணியில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். நல்ல நிலையில் இருக்கும்போது வாய்ப்பு வழங்கினால் தான் அவருக்கு நம்பிக்கையும் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- ஜெய்பூர் மைதானத்தில் அதிக பட்ச சேசிங் இதுவாகும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியின் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 95 ரன்களும் சாம்சன் 66 ரன்கள் குவித்தனர். இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. அப்துல் சமத் அதிரடியாக விளையாடியும் கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது சந்திப் சர்மா அவுட்டாக்கினார். ஆனால் அதை நோ-பாலாக வீசிய காரணத்தால் கடைசியில் ஃப்ரீ ஹிட்டில் சிக்சர் அடித்த அவர் 7 பந்தில் 17 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் ஐதராபாத் அணி முதல் முறையாக 200+ இலக்க ரன்னை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது. ஜெய்பூர் மைதானத்தில் அதிக பட்ச சேசிங் இதுவாகும்.
- ராஜஸ்தான் அணி சேப்பாக்கத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
- அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர சென்னை அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும்.
ஜெய்ப்பூர்:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், மற்ற பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் ஆட வேண்டும். லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டோனி தலைமையிலான சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. முந்தைய 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்த சென்னை அணி அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் இருக்கிறது.
சென்னை அணியின் பேட்டிங்கில் டிவான் கான்வே (4 அரைசதம் உள்பட 314 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (270 ரன்கள்), ரஹானே (209 ரன்கள்), ஷிவம் துபே (184 ரன்கள்) ஆகியோர் சூப்பர் பார்மில் இருக்கிறார்கள். டிவான் கான்வே தொடர்ச்சியாக 4 அரைசதம் அடித்து இருப்பதும், முந்தைய ஆட்டத்தில் ரஹானே 24 பந்துகளில் அரைசத்தை எட்டியதுடன் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (10 விக்கெட்), மொயீன் அலி (7 விக்கெட்), பதிரானா, தீக்ஷனா ஆகியோர் கலக்கி வருகிறார்கள்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றியும் (ஐதராபாத், டெல்லி, சென்னை, குஜராத் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியும் (பஞ்சாப், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) கண்டுள்ளது. அந்த அணி தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் லக்னோ, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது. ரன் இலக்கை விரட்டுகையில் சந்தித்த இந்த தோல்விகளுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் முக்கிய காரணமாகும்.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், துருவ் ஜூரெல் ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவது அந்த அணிக்கு பாதகமான அம்சமாக உள்ளது.
எனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (12 விக்கெட்), டிரென்ட் பவுல்ட், ஆர்.அஸ்வின் (இருவரும் தலா 9 விக்கெட்), சந்தீப் ஷர்மா (7 விக்கெட்) ஆகியோர் அசத்தி வருகிறார்கள். முந்தைய தோல்வியை மறந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வியூகங்களை வகுக்கும் ராஜஸ்தான் அணி சேப்பாக்கத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர சென்னை அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த இந்த இரண்டு அணிகளும் மல்லுக்கட்டும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15 ஆட்டங்களில் சென்னை அணியும், 12 ஆட்டங்களில் ராஜஸ்தானும் வென்று இருக்கின்றன.
- ஐபிஎல் சீசனில் ஒரு அணி தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்துவது பெரிய விஷயம்.
- ஏலத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
டெல்லி:
ராஜஸ்தான் ராயல்ஸ் வலுவான அணியாக இருப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இன்று 16-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்தது. அணிக்கு வலு சேர்க்கும் வகையில் ஜோ ரூட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரை இந்த சீசனுக்காக ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான்.
இந்நிலையில், அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவும். ராஜஸ்தான் அணி வலுவாக இருப்பதாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சீசனில் ஒரு அணி தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்துவது பெரிய விஷயம். அதனால் யார் வெல்வார்கள் என சொல்வதும் கடினம். கடந்த ஆண்டு புதிய அணியான குஜராத் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த முறை இறுதிப் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணி இந்த முறை வலுவான அணியை அதனை அடிப்படையாக வைத்தே கட்டமைத்துள்ளது. ஏலத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் ராஜஸ்தான் வலுவாக உள்ளது.
என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள யாஷ் துல் மற்றும் அமன் கான் ஆகியோருக்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையும் என பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றில் எந்த அணிகள் விளையாட போகின்றன என்பதை கணிப்பது எப்போதும் கடினமானது.
- ஏனென்றால் அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருக்கும்.
16-வது ஐபிஎல் சீசன் இன்று அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதுகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வெல்ல வாய்ப்பு இல்லை எனவும் ராஜஸ்தான் அணிதான் வெல்லும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இது குறித்து மைக்கேல் வாகன் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கானது என்று கருதுகிறேன். அந்த அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் என்றார்.
அதேபோல் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் கூறும்போது:-
ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றில் எந்த அணிகள் விளையாட போகின்றன என்பதை கணிப்பது எப்போதும் கடினமானது. ஏனென்றால் அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் இடையே போட்டி இருக்கும். கோப்பையை டெல்லி அணி வெல்லும் என்று கருதுகிறேன் என்றார்.
- ஏப்ரல் 2-ந் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
- ரியான் பராக் கங்னம் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஐபிஎல் 16-வது சீசன் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன்பின்னர் கோப்பையை வெல்லவில்லை. கடந்த சீசனில் இறுதி போட்டிக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது.
எனவே இந்த சீசனில் கோப்பையை வென்றே தீரும் உறுதியுடன் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்குகிறது.
அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்யும் வீடியோவையும் ஜாலியான வீடியோவையும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் இடம் பெற்றுள்ள ரியான் பராக் கங்னம் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த வீடியோ அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. ஏப்ரல் 2-ந் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
- காயம் காரணமாக நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக பிரசித் கிருஷ்ணா அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியில் பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காயம் காரணமாக நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைடுத்து அவருக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மாவை ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக பிரசித் கிருஷ்ணா அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். அதிலிருந்து அவர் குணம் அடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க மாட்டார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனுபவம் மிக்க வீரரான சந்தீப் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 சீசன்களில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நவ்தீப் சைனி மற்றும் ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சந்தீப் சர்மா இணையவுள்ளார்.
பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஜானி பேர்ஸ்டோ தவிர்க்க முடியாத காரணங்களால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை ஒப்பந்தம் செய்வதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சன்று இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
கொல்கத்தா எடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.
இதனால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பில் 188 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 56 பந்துகளில் இரண்டு 6, 12 பவுண்டரிகளில் 89 ரன்களை குவித்தார். தொடர்ந்து, சாம்சன் 47 ரன்கள், படிக்கல் 28 ரன்கள், ஹட்மயர் மற்றும் ரியான் பராங் தலா 4 ரன்கள், ஜெய்ஸ்வால் 2 ரன்கள், அஷ்வின் 2 ரன்களை சேர்த்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ஷாமி, யாஷ் தயால், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் இவர்தான்- வீரேந்திர சேவாக் கருத்து