செய்திகள்

டேவிஸ் கோப்பை உலக குரூப் பிளேஆப்- செர்பியாவை எதிர்கொள்கிறது இந்தியா

Published On 2018-04-10 11:39 GMT   |   Update On 2018-04-10 11:39 GMT
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளேஆஃப் சுற்றில் இந்தியா செர்பியாவை எதிர்கொள்கிறது. #DavisCup
டேவிஸ் கோப்பை டென்னிஸ் மண்டலத்திற்கு இடையிலான போட்டி கடந்த வாரம் சீனாவில் நடைபெற்றது. இதில் இந்தியா 3-2 என சீனாவை வீழ்த்தியது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது. அதன்பின் தொடரந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று சீனாவை வீழ்த்தியது.

இந்நிலையில் டேவிஸ் கோப்பை உலக குரூப் பிளேஆஃப் சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா செர்பியாவை எதிர்கொள்கிறது. 2014-ம் ஆண்டும் இந்தியா செர்பியாவைத்தான் எதிர்கொண்டது.

மற்ற ஆட்டங்களில் அர்ஜென்டினா - கொலம்பியா, பிரிட்டன் - உஸ்பெகிஸதான், ஆஸ்திரேலியா - ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து - ஸ்வீடன்,  கனடா - நெதர்லாந்து, செக் குடியரசு - ஹங்கேரி, ஜப்பான் - போஸ்னியா/ஹெர்ஸ்கோவினா அணிகள் மோதுகின்றன.
Tags:    

Similar News