செய்திகள்

மியாமி டென்னிஸ்- ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Published On 2018-03-24 07:25 GMT   |   Update On 2018-03-24 08:05 GMT
மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் பிரான்ஸ் வீரர் பென்டிச் பெர்ரிடம் 3-6,4-6 என்ற நேர்செட் கணக்கில் தோற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கோண்டா (இங்கிலாந்து), குவிட்டோவா (செக்குடியரசு), ஸ்விடோலினா (உக்ரைன்), அசெரன்கா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

2-வது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னாக்கி 6-0, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் மோனிகா பெக்குலிடம் (போர்டோரிகோ) தோற்று வெளியேறினார்.
Tags:    

Similar News