செய்திகள்

பெங்களூர் நிதி நிறுவனம் ராகுல் டிராவிட்டிடம் ரூ.4 கோடி மோசடி

Published On 2018-03-18 10:05 GMT   |   Update On 2018-03-18 10:05 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட்டிடம் ரூ.4 கோடி பெங்களூர் நிதி நிறுவனம் மோசடி செய்துள்ளது. #RahulDravid
பெங்களூர்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். 45 வயதான இவர் தற்போது இந்திய ‘ஏ’ அணி மற்றும் ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ராகுல் டிராவிட் ரூ.4 கோடி பணத்தை இழந்து உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

2014-ம் ஆண்டு அவர் விக்ரம் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார். முன்னாள் நிருபர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் அவர் பணத்தை போட்டார். 2015-ம் ஆண்டு அவரது பணம் திரும்பியது. மேலும் அந்த நிறுவனத்தில் பணத்தை போடுங்கள் என்று கூறியதை தொடர்ந்து டிராவிட் ரூ.20 கோடி முதலீடு செய்தார். இதில் ரூ.16 கோடி அவருக்கு திரும்பி வந்து விட்டது.

2017-ம் ஆண்டில் இருந்து பணம் திரும்பவில்லை. ரூ.4 கோடி பணம் அவருக்கு வரவேண்டி இருந்தது. இதற்கிடையே அந்த நிறுவனம் 800 வாடிக்கையாளர்களிடம் ரூ.500 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

ராகுல் டிராவிட்டிடம் அந்த நிறுவனம் ரூ.4 கோடி மோசடி செய்து இருந்தது. இது தொடர்பாக அவர் பெங்களூர் சதாஷிவ நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். தன்னிடம் விக்ரம் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி ரூ.4 கோடி மோசடி செய்து விட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் டிராவிட் மட்டுமின்றி பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிரகாஷ் படுகோனே ஆகியோரும் அந்த நிறுவனத்தில் ஏமாந்து உள்ளனர். இதில் டிராவிட் மட்டுமே தற்போது புகார் கொடுத்து உள்ளார். #RahulDravid
Tags:    

Similar News