செய்திகள்

முகமது ஷமியின் குடும்ப பிரச்சனையில் பி.சி.சி.ஐ. தலையிடாது- சி.கே.கன்னா

Published On 2018-03-17 07:22 GMT   |   Update On 2018-03-17 07:22 GMT
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி அளித்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது குடும்ப பிரச்சனையில் தலையிட மாட்டோம் என பி.சி.சி.ஐ. கூறியுள்ளது. #bcci #MohammedShami #ckkhanna
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. அவர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பல்வேறு புகார்களை கூறி இருந்தார். கொடுமைப்படுத்தி, கொலை செய்ய முயற்சித்ததாக போலீசில் புகார் அளித்தார். தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு முகமது ஷமி துபாய் சென்று பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை சந்தித்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

புகாரின் அடிப்படையில் கொல்கத்தா போலீசார் முகமது ‌ஷமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதேசமயம், முகமது ‌ஷமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடத்துமாறு கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் வினோத்ராய், ஊழல் தடுப்பு குழுவை கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து முகமது‌ ஷமியிடம் சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில், 'முகமது ஷமி மீதான புகார் குறித்து ஊழல் தடுப்பு குழு அறிக்கை சமர்பித்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும். அவர் தவறு செய்யவில்லை என நிரூபிக்கப்பட்டால் மத்திய ஒப்பந்தத்தில் நீடிப்பார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நாங்கள் முடிவு செய்ய முடியாது.

கொல்கத்தா போலீசார் அவர்களுடைய கடமையை செய்து வருகின்றனர். அதில் நாங்கள் தலையிட மாட்டோம். அவர் கிரிக்கெட் விதிமுறைகளை மீறினால் மட்டுமே எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். வீரர்களின் சொந்த பிரச்சனையில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை. அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது குறித்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி முடிவு செய்யும். அவர்களும் நீரஜ் குமாரின் அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். இறுதி முடிவு ஐபிஎல் ஆட்சிமன்ற குழுவினரால் எடுக்கப்படும்' என பி.சி.சி.ஐ. செயல் தலைவர் சி.கே.கன்னா தெரிவித்தார். #bcci #MohammedShami #ckkhanna
Tags:    

Similar News