செய்திகள்

ஹாக்கி அணியின் ஸ்பான்சரானது ஒடிசா அரசு

Published On 2018-02-15 10:53 GMT   |   Update On 2018-02-15 10:53 GMT
இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி மற்றும் பெண்கள் ஹாக்கி அணியின் 5 வருட ஸ்பான்சர் பொறுப்பை ஒடிசா அரசு ஏற்றுள்ளது. #HockeyIndia
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி ஆகும். ஆனால் இந்தியாவில் ஹாக்கியை விட கிரிக்கெட்டிற்கே ரசிகர்களின் ஆதரவு அதிக அளவில் உள்ளது. ஹாக்கியை பிரபலபடுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

இந்தியாவில் பெரும்பாலான தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான தொடர்கள் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. ஹாக்கி போட்டிக்கு ஒடிசாவில் அதிக அளவில் ஆதரவு இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா ஆண்கள் ஹாக்கி அணி மற்றும் பெண்கள் ஹாக்கி அணியின் ஐந்து வருட ஸ்பான்சர் பொறுப்பை ஒடிசா மாநிலம் ஏற்றுக் கொண்டது. ஒடிசா ஸ்பான்சர் அடங்கிய புது ஜெர்சியை அம்மாநில முதல்வர் பட்நாயக் அறிமுகப்படுத்தினார். இதில் ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் த்ருவ் பத்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



ஹாக்கி அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்தி பேசிய ஒடிசா முதல்வர் ‘‘இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் அனைத்து நாடுகளும் புவனேஸ்வர் வந்து விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒடிசாவில் ஹாக்கி முக்கிய போட்டியாக திகழ்கிறது.

மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. குறிப்பாக மழைப்பகுதிகளில் குழந்தைகள் ஹாக்கி மட்டையுடன் செல்வதை பார்க்க முடிகிறது. ஐந்து வருட ஸ்பான்சர் என்பது இந்திய நாட்டிற்கு ஒடிசாவின் பரிசு’’ என்றார். #HockeyIndia #HockeyWorldCup
Tags:    

Similar News