செய்திகள்

உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கு நேபாளம்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி

Published On 2018-02-15 10:14 GMT   |   Update On 2018-02-15 10:37 GMT
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றுக்கு நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. #ICCWC2019
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கும். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் போட்டியை நடத்தும் இங்கிலாந்தை தவிர்த்து முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.

மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஐசிசி தரவரிசையில் இடம் பிடித்திருக்கும் முன்னணி அணியான வெஸ்ட் இண்டீஸ் உள்பட ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் நேரடியாக தகுதி பெறவில்லை. இந்த அணிகள் தகுத் சுற்றில் விளையாட வேண்டும். இவற்றுடன் 2015 முதல் 2017 வரை நடைபெற்ற உலகக் கிரிக்கெட் லீக் சம்பியன்ஷிப் தொடர் மூலம் தகுதிப் பெற்ற நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஹாங்காங் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நான்கு அணிகள் விளையாடுகிறது.

டிவிஷன் 2 லீக்கில் சிறப்பாக விளையாடும் இரண்டு அணிகள் தகுதிச் சுற்றுக்கு இடம்பிடிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற டிவிஷயன் 2 லீக்கில் நேபாளம் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5-ல் மூன்றில் வெற்றி பெற்றும் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் நேபாளம் முதன்முறையாக உலகக்கோப்பை தகுதிச் சுற்று தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த 10 அணிகளுக்கு இடையிலான தொடரில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும். உலகக்கோப்ப தகுதிச்சுற்றுத் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற இருக்கிறது. #ICCWC2019 #CricketWorldCupQualifier
Tags:    

Similar News