செய்திகள்

கவுதம் காம்பீரை தவற விடுகிறோம்: கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான்

Published On 2018-02-03 14:55 GMT   |   Update On 2018-02-03 14:55 GMT
இரண்டு முறை கோப்பையை வாங்கி தந்த கவுதம் காம்பீரை தவற விடுகிறோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் ஷாருக்கான் கூறியுள்ளார். #IPL2018 #KKR
ஐபிஎல் சீசன் 10 ஆண்டு நிறுவடைந்து 11-வது சீசனுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் அனைத்து அணிகளும் 5 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு, மற்ற வீரர்களை பொது ஏலத்தின் மூலம் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது.

அதன்படி எல்லா அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தது. கொல்கத்தா அணியில் 2011-ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தவர் கவுதம் காம்பீர். இவரது தலைமையில் 2012 மற்றும் 2014-ல் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடக்க வீரராக களம் இறங்கிய காம்பீர் பெரிய அளவில் சொதப்பியது கிடையாது. தற்போது உள்ளூர் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். கொல்கத்தா அணி தன்னை தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்த்தார்.



ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை தக்க வைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோரை தக்க வைத்தது. தன்னை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பதால், ஏலத்தின்போது தன்னை ஏலம் கேட்க வேண்டாம் என்றும், ரைட் டூ மேட்ச் கார்டு மூலம் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என்றார் என்றும் நிர்வாகத்திடம் கூறிவிட்டார்.

இதனால் டெல்லி அணி 2.8 கோடி ரூபாய் கொடுத்து காம்பீரை வாங்கியது. காம்பீர் அணியில் இருந்து விலகியது குறித்து ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஷாருக்கானிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஷாருக் கான் ‘‘காம்பீரை தவற விடுகிறோம் Will miss him’’  என்று பதிவிட்டு, காம்பீர் வெளியேறியது குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார். #IPL2018 #KKR
Tags:    

Similar News