செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்காள தேசம்

Published On 2018-01-23 14:21 GMT   |   Update On 2018-01-23 14:21 GMT
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணியை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காள தேசம். #BANvZIM #TriNationODI
வங்காள தேசத்தில் வங்காள தேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமிம் இக்பால், அனாமுல் ஹக்யூ தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அனாமுல் ஹக்யூ ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து தமிம் இக்பால் உடன் ஷாகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தமிம் இக்பால் 76 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷாகிப் அல் ஹசன் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காள தேசம் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணியின் கிரிமீயர் 4 விக்கெட்டும், ஜார்விஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. ஆனால் வங்காள தேச வீரர்களின் அபார பந்து வீச்சால் 125 ரன்னில் சுருண்டது. இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்காள தேசம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், மோர்தசா, சுன்சாமுல் இஸ்லாம், முஸ்டாபிஜூர் ஹர்மான் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
Tags:    

Similar News