செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் 320-7

Published On 2018-01-19 10:14 GMT   |   Update On 2018-01-19 10:14 GMT
வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்துள்ளது. #BANvSL #SLvBAN

டாக்கா:

வங்காளதேசத்தில் வங்காள தேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தமிம் இக்பாலும், அனமுல் ஹக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அனமுல் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஷகிப் அல் ஹசன் - தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இக்பால் அரைசதம் அடித்தார். அவர் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 



அதன்பின் முஷ்பிகுர் ரஹிம் களமிறங்கினார். ஷகிப் அல் ஹசன் 67 ரன்களிலும், முஷ்பிகுர் 62 ரன்களிலும், அதைத்தொடர்ந்து களமிறங்கிய மஹ்மதுல்லா 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்தது. சபிர் ரஹ்மான் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இலங்கை அணி பந்துவீச்சில் திசாரா பெரேரா 3 விக்கெட்களும், நுவான் பிரதீப் 2 விக்கெட்களும், அகிலா தனஞ்ஜெயா, அசேலா குணரத்னே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வங்காளதேச அணி, இலங்கை அணியின் வெற்றிக்கு 321 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. #BANvSL #SLvBAN
Tags:    

Similar News