செய்திகள்

U19 உலகக்கோப்பை: இந்திய அணியில் இஷான் பொரேலுக்குப் பதிலாக ஆதித்யா தாகரே சேர்ப்பு

Published On 2018-01-17 15:20 GMT   |   Update On 2018-01-17 15:20 GMT
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் காயத்தால் அவதிப்படும் இஷான் பொரேலுக்குப் பதிலாக ஆதித்யா தாகரே சேர்க்கப்பட்டுள்ளார். #U19WorldCup
நியூசிலாந்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்காப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வேகப்பந்து விச்சாளர் இஷான் பொரேல் 4.1 ஓவர்கள் வீசிய நிலையில் காயம் அடைந்தார்.

இதனால் அவருக்குப் பதிலாக ஆதித்யா தாகரே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா 2-வது போட்டியில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.



நாக்அவுட் சுற்றில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதால், அதற்கு முன் ஆதித்யா தாகரே இந்திய அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விதர்பா அணி முதன்முறையாக ரஞ்சி டிராபியை கைப்பற்ற ஆதித்யா தாகரே முக்கிய வீரராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #U19WorldCup #AdityaThakare
Tags:    

Similar News