செய்திகள்

2017-ம் ஆண்டின் சிறந்த ஆப்பிரிக்க கால்பந்து வீரராக மொகமது சாலா தேர்வு

Published On 2018-01-05 12:25 GMT   |   Update On 2018-01-05 12:25 GMT
லிவர்பூல் அணிக்காக விளையாடி வரும் எகிப்தின் மொகமது சாலா 2017-ம் ஆண்டின் சிறந்த ஆப்பிரிக்க கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். #Liverpool #MohamedSalah
எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரர் மொகமது சாலா. 25 வயதான இவரின் துடிப்பான ஆட்டத்தால் எகிப்து அணி ரஷியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதிப் பெற்றது.

பிரிமீயர் லீக் தொடரில் இந்த சீசனில்தான் ஏஎஸ் ரொமா அணியில் இருந்து லிவர்பூல் அணிக்கு மாறினார். முதல் சீசனிலேயே  மொகமது சாலா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனிலா் இதுவரை 29 ஆட்டத்தில் 23 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.



எகிப்து அணிக்காகவும், லிவர்பூல் அணிக்காகவும் விளையாடி வரும் மொகமது சாலா, 2017-ம் ஆண்டின் சிறந்த தென்ஆப்பிரிக்கா வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார். 1983-ம் ஆண்டின் எகிப்தைச் சேர்ந்த மெக்மூத் அல் காதிப் இந்த விருதைப் பெற்றிருந்தார். அதன்பின் தற்போது மொகமது சாலா பெற்றுள்ளார். #Liverpool #MohamedSalah
Tags:    

Similar News