செய்திகள்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்

Published On 2018-01-05 06:43 GMT   |   Update On 2018-01-05 06:43 GMT
ஆஸ்திரேலியா ஓபன் போட்டி தொடங்க உள்ள நிலையில் செரீனா வில்லியம்ஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். #AustralianOpen #SerenaWilliams
கென்பெரா:

முன்னணி டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கும், அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் வெற்றி பெற்ற செரீனா அதன் பின் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

குழந்தை பிறந்த பிறகு  முதல் முறையாக கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட செரீனா பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஜலீனாவிடன் தோல்வியடைந்தார்.  இருப்பினும் ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் விளையாடுவார் எனக்கூறப்பட்டது. இந்நிலையில், செரீனா ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார். தனக்கு ஓய்வு தேவைப்படுவதால் போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.

2011-ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் விளையாடி வரும் செரீனா முதல் முறையாக ஆஸ்திரேலியா ஓபனிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா ஓபன் போட்டி வருகின்ற 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. இப்போட்டியிலிருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே மற்றும் ஜப்பானின் கெய் நிஷிகோரி காயம் காரணமாக விலகியுள்ளனர்.

Tags:    

Similar News