செய்திகள்

பிரிஸ்பேன் சர்வதேச ஓபன்: காயத்தால் கோன்டா போட்டியின் இடையே விலகல்

Published On 2018-01-04 13:43 GMT   |   Update On 2018-01-04 13:43 GMT
பிரிஸ்பேன் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் காலிறுதி ஆட்டத்தின்போது காயத்தின் காரணமாக கோன்டா பாதிலேயே வெளியேறினார். #BrisbaneTennis #JohannaKonta
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான காலிறுதி ஒன்றில் இங்கிலாந்தின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜோகன்னா கோன்டா, எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 1-6 என கோன்டா இழந்தார். ஆனால் 2-வது செட்டை 7(8) - 6(6) எனக் கடும் போராட்டத்திற்குப் பின் கைப்பற்றினார். 3-வது செட் தொடங்குவதற்கு முன் வலது இடுப்புப் பகுதியில் வலி இருப்பதாக உணர்ந்தார்.



அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். 3-வது செட்டில் 3-2 என முன்னிலையில் இருந்தபோது. கோன்டாவால் தொடர்ந்து ஆட்டத்தை தொடர முடியவில்லை. இதனால் போட்டியின் பாதிலேயே விலகினார்.

காயத்தால் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் சிட்னி சர்வதேச தொடரில் விளையாடுவாரா? என்பது சந்தேகம் எனக்கூறப்படுகிறது.
Tags:    

Similar News