செய்திகள்

கேப்டவுனில் மழையால் உள்விளையாட்டு அரங்கில் இந்திய வீரர்கள் பயிற்சி

Published On 2018-01-01 09:16 GMT   |   Update On 2018-01-01 09:16 GMT
கேப்டவுன் நகரில் பெய்த மழையால் இந்திய வீரர்கள் பயிற்சி பெறும் மைதானம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சியில் ஈடுப்பட்டனர்.
கேப்டவுன்:

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 5-ந்தேதி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இந்திய அணி பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடாமல் நேரடியாக டெஸ்டில் விளையாடுகிறது.

இந்த நிலையில் கேப்டவுன் நகரில் பெய்த மழையால் இந்திய வீரர்கள் பயிற்சி பாதிக்கப்பட்டது. இதனால் வீரர்கள் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றனர். பேட்டிங் செய்தும், கால்பந்து ஆடியும் வீரர்கள் பயிற்சி பெற்றனர்.

இந்திய வீரர்கள் பயிற்சி பெறும் பயிற்சி மைதானம் குறித்து கேப்டன் வீராட்கோலி ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து இருந்தார். மழையால் அங்கு பயிற்சி பெற முடியாமல் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றனர்.



முதல் டெஸ்டில் தவான் காயம் காரணமாக விளையாடமாட்டார். இதனால் முரளிவிஜய்யும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள்.

தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய் இலங்கைக்கு எதிரான சமீபத்தில் நடந்த உள்ளூர் டெஸ்ட் தொடரில் 292 ரன்கள் எடுத்துள்ளார். 2 டெஸ்டில் விளையாடி இரண்டிலும் சதம் அடித்தார். அவரது சராசரி 97.33 ஆக அந்த தொடரில் இருந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்திய அணி இதுவரை தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. ஆனால் இது மிகவும் சவாலானதாகும்.
Tags:    

Similar News