செய்திகள்

15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது வங்காளதேசம்

Published On 2017-12-24 22:00 GMT   |   Update On 2017-12-24 22:00 GMT
வங்காளதேசத்தில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.
டாக்கா:

தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு சார்பில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான முதலாம் ஆண்டு கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இந்தியா, வங்காளதேசம், பூட்டான், நேபாளம் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன. 17-ம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.



வங்காளதேச தலைநகரான டாக்காவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா - வங்காளதேசம் அணிகள் விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 41-வது நிமிடத்தில் வங்காளதேசத்தின் ஷம்சுன் நஹர் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை பெற்றது.



தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து வங்காளதேசம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
Tags:    

Similar News