செய்திகள்

உலக பளு தூக்கும் போட்டி: 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீராங்கனைக்கு தங்கம்

Published On 2017-11-30 07:30 GMT   |   Update On 2017-11-30 12:28 GMT
உலக பளு தூக்கும் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சானு பெற்றார்.
புதுடெல்லி:

உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் நடந்தது.

இதன் 49 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு தங்கம் வென்றார்.

அவர் ஸ்னாட்ச் முறையில் 85 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் முறையில் 109 கிலோவும் ஆக மொத்தம் 194 கிலோ தூக்கினார். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்தார்.

உலக பளு தூக்கும் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சானு பெற்றார்.



மணிப்பூரைச் சேர்ந்த அவர் இந்தியன் ரெயில்வேயில் பணி புரிகிறார்.

ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி 1994 மற்றும் 1995-ல் உலக பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று இருந்தார்.

அவருக்கு அடுத்தபடியாக உலக பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பெருமை மீராபாய் சானுவுக்கு கிடைத்தது.
Tags:    

Similar News