செய்திகள்

தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்: சிறுவன் ஷார்துல் நான்கு தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை

Published On 2017-11-23 11:22 GMT   |   Update On 2017-11-23 11:23 GMT
தேசிய அளவிலான 61 வது துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 14 வயது சிறுவன் ஷார்துல் விகான் நான்கு தங்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளான்.
புதுடெல்லி:

தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஷார்துல் விகான் ஒரே நாளில் 4 தங்கபதக்கங்கள் வென்றான். ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரண்டு பிரிவிலும் தங்கம் வென்றான்.


விகான் ஆசிய சாம்பியனான அன்வர் சுல்தானிடம் பயிற்சி பெற்று வருகிறார். அவர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள அன்கூர் மித்தலிடம் மோதி வெற்றி பெற்றார். ஜூனியர் பிரிவில் 77-74 என்ற புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.


சீனியர் குழு பிரிவில் ஷார்துல் மற்றும் அக்வர் , மித்.அஸ்காப்புடன் இணைந்து தங்கம் வென்றனர். ஜூனியர் பிரிவில் ஷார்துல் மற்றும் அக்வர், அஸ்கார் கஸ்சைன் கானுடன் இணைந்து விளையாடி தங்கம் வென்றனர்.

Tags:    

Similar News