செய்திகள்

சர்வதேச போட்டிகளில் 50 சதங்கள் அடித்து விராட் கோலி சாதனை

Published On 2017-11-20 11:25 GMT   |   Update On 2017-11-20 11:25 GMT
கொல்கத்தா ஈடன் கார்டனில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 50 சதங்கள் அடித்து விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

2-வது இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் 18-வது சதம் இதுவாகும். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 50 சதம் அடித்து அசத்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 32 சதங்கள் அடித்துள்ளார்.



இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். பாண்டிங் 71 சதங்களுடன் 2-வது இடத்திலும், சங்ககரா 63 சதங்களுடன் 3-வது இடத்திலும், கல்லீஸ் 62 சதங்களுடன் 4-வது இடத்திலும், அம்லா 54 சதங்களுடன் 5-வது இடத்திலும், ஜெயவர்தனே 54 சதங்களுடன் 6-வது இடத்திலும், லாரா 53 சதங்களுடன் 7-வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 50 சதங்களுடன் 8-வது இடத்தில் உள்ளார்.

இந்தியா சார்பில் தெண்டுல்கர், கோலியைத் தவிர டிராவிட் 48 சதங்களும், சேவாக் 38 சதங்களும், கங்குலி 38 சதங்களும் அடித்துள்ளனர்.
Tags:    

Similar News