செய்திகள்

உலக டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் ஹென்ரி கான்டினன் - ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

Published On 2017-11-19 22:35 GMT   |   Update On 2017-11-19 22:35 GMT
ஏ.டி.பி. உலக டூர் எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் இறுதிப் போட்டியில் ஹென்ரி கான்டினன் - ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
லண்டன்:

ஏ.டி.பி. உலக டூர் எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் இறுதிப் போட்டியில் ஹென்ரி கான்டினன் - ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

ஏ.டி.பி. உலக டூர் எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் கடந்த 12-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் பின்லாந்து வீரர் ஹென்ரி கான்டினன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஜான் பியர்ஸ் ஜோடி, போலந்து வீரர் லுகாஸ் குபாட் மற்றும் பிரேசில் வீரர் மர்செலோ மலோ ஆகியோர் மோதினர்.

கான்டினன் - பியர்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடி 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது சுற்றை  கைப்பற்ற வேண்டும் என  குபாட் - மர்செலோ மலோ ஜோடி ஆவேசமாக விளையாடியது.

ஆனால், இரண்டாவது சுற்றிலும் கோண்டினன் - பியர்ஸ் ஜோடி அபாரமாக விளையாடியது. இதனால் அந்த செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இறுதியில், கோண்டினன் - பியர்ஸ் கோடி 6-4, 6-2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
Tags:    

Similar News