செய்திகள்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் மீது உஸ்மான் கவாஜா

Published On 2017-10-16 15:43 GMT   |   Update On 2017-10-16 15:43 GMT
வீரர்கள் தேர்வின் விதிமுறை விஷயத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மீது தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா விமர்சனம் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா. 30 வயதான இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஆஷஸ் தொடரின்போது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார்.

ஆனால் துணைக்கண்டத்தில் கவாஜா சிறப்பாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியா இலங்கை சென்று விளையாடும்போது, ஆஸ்திரேலியா 0-3 என படுதோல்வியடைந்தது.

இந்த தொடரின்போது முதல் நான்கு இன்னிங்சில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் 3-வது போட்டியில்  இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் சொந்த மண்ணில் தொடர்ந்து நான்கு அரைசதங்கள் விளாசினார். இருந்தாலும், இந்தியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் சேர்க்கப்படவில்லை. வங்காள தேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் இடம்பிடித்தார். ஆனால் 2-வது போட்டியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

விரைவில் ஆஷஸ் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இடம் கிடைக்கும் என கவாஜா நம்பிக்கையில் உள்ளார்.



இந்நிலையில் அடிக்கடி மாற்றம் செய்யப்படும் ஆஸ்திரேலியாவின் தேர்வு கொள்கையை கவாஜா விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து கவாஜா கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதற்கு முன்பு இப்படி செய்தது கிடையாது. அவர்கள் இப்படி ஏன் செய்கிறார்கள் என்பது உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை.

அணிக்கு வருவது, அணியில் இருந்து வெளியேறுவது ஒவ்வொரு வீரருக்கும், அணியில் நிலையற்றத் தன்மையை உருவாக்கும் என்பது என் கணிப்பு. வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்காவிடில், ஆட்டத்திறமை மேம்படுத்துவது மிகவும் கடினம்’’ என்றார்.
Tags:    

Similar News