செய்திகள்

இத்தாலி டென்னிஸ் வீரர் பாபியோ போக்னினி மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Published On 2017-10-12 07:40 GMT   |   Update On 2017-10-12 07:40 GMT
பெண் நடுவரை அவமதித்த குற்றத்திற்காக இத்தாலி டென்னிஸ் வீரர் பாபியோ போக்னினி கிராண்ட் ஸ்லாம் விளையாட விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டதாக கிராண்ட் ஸ்லாம் வாரியம் அறிவித்துள்ளது.
பாரிஸ்:

இத்தாலி டென்னிஸ் வீரரான பாபியோ போக்னினி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது பெண் நடுவரை அவமதிக்கும் வகையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே, போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அவருக்கு இரண்டு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் 96 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது தண்டனையை குறைத்து கிராண்ட் ஸ்லாம் வாரியம் அறிவித்துள்ளது. அவர் மீது போடப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கியதுடன், அபராதத்தையும் 47 டாலராக குறைத்து அறிவித்துள்ளது. இனி மேல் இது போன்ற தவறு செய்தால் மீண்டும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தண்டனையை அவர் எதிர்க்க வில்லை. அதனை ஏற்றுக்கொண்டார் என கிராண்ட் ஸ்லாம் வாரியம் தெரிவித்தது.

இது குறித்து போக்னினி கூறுகையில், 'டென்னிஸ் வாரியம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் நான் அதனை ஏற்றுக்கொள்வேன். என் மீது தவறு உள்ளது. அதனால் அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற தவறுகள் இனிமேல் நடைபெறாது' என கூறினார்.
Tags:    

Similar News