செய்திகள்

தங்கப்பந்து விருது: மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் உள்பட 30 பேர் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியீடு

Published On 2017-10-10 10:31 GMT   |   Update On 2017-10-10 10:31 GMT
தங்கப்பந்து என்று அழைக்கப்படும் ‘பலோன் டி’ஆர்’ விருதிற்காக மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் உள்பட 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்கு, பிரான்ஸ் கால்பந்து மேகசின் சார்பில் ஆண்டுதோறும் பிபா தங்கப்பந்து என்றழைக்கப்படும் ‘பலோன் டி'ஆர்’ விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான வீரர் பத்திரிகையாளர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இந்த வருடத்திற்கான 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் இடம்பிடித்துள்ளனர்.

மெஸ்சி ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை இந்த விருதை பெற்றுள்ளார். ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, சாம்பியன் லீக் டைட்டிலை வென்றுள்ளது.



இதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ரொனால்டோ இந்த வருடத்திற்கான விருதை பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று பேருடன் பவுலோ டைபாலா, மார்சிலோ, சுவாரஸ், ரமோஸ், பிலிப்பே கவுன்டினோ கிறிஸ்மான் போன்றோரும் இடம்பிடித்துள்ளனர்.
Tags:    

Similar News