செய்திகள்

மாஸ்டர்ஸ் ஸ்னூக்கர்: குஜராத் சாம்பியன்

Published On 2017-08-26 04:42 GMT   |   Update On 2017-08-26 04:42 GMT
ஆமதாபாத்தில் நடந்து வந்த கியூ மாஸ்டர்ஸ் லீக் ஸ்னூக்கர் போட்டியின் நேற்றைய இறுதி ஆட்டத்தில் உள்ளூர் அணியான குஜராத் கிங்ஸ் டெல்லி டான்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.
ஆமதாபாத் :

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில், முதலாவது கியூ மாஸ்டர்ஸ் லீக் ஸ்னூக்கர் போட்டி ஆமதாபாத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் உள்ளூர் அணியான குஜராத் கிங்ஸ் 3-0 என்ற கணக்கில் டெல்லி டான்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

கேப்டன் ஆண்ட்ரூ பேஜிட், அலோக் குமார் ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும், ஆண்ட்ரூ பேஜிட்- டாரியா சிரோடினா இரட்டையர் பிரிவிலும் குஜராத் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

அந்த அணிக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இதில் பங்கஜ் அத்வானி தலைமையிலான சென்னை ஸ்டிரைக்கர்ஸ் அணி அரைஇறுதியுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News