செய்திகள்

பல்லேகலே டெஸ்ட்: 135 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது இலங்கை

Published On 2017-08-13 11:25 GMT   |   Update On 2017-08-13 11:25 GMT
பல்லேகலே டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆகியுள்ளது. குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் சதத்தால் இந்தியா முதல் 487 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சண்டகன் 5 விக்கெட் வீழ்த்தினார்.



பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 135 ரன்னில் சுருண்டது. இந்தியாவை விட 352 ரன்கள் பின்தங்கியதால் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

இலங்கை அணி தரப்பில் கேப்டன் சண்டிமல் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
Tags:    

Similar News