செய்திகள்

தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் விளாசி உலக சாதனையை சமன் செய்தார் லோகேஷ் ராகுல்

Published On 2017-08-12 11:36 GMT   |   Update On 2017-08-12 11:36 GMT
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 7 அரைசதங்கள் அடித்து உலக சாதனையை சமன் செய்துள்ளார் இந்திய தொடக்க பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பல்லேகலே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஜடேஜாவிற்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

துவக்க வீரர்களான தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். லோகேஷ் ராகுல் 67 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்து உலக சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், விஸ்வநாத், டிராவிட் அடித்த 6 அரைசதங்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 90, 51, 67, 60, 51 (அவுட்இல்லை) என தொடர்ந்து ஐந்து அரைசதங்கள் அடித்திருந்தார்.



வைரஸ் காய்ச்சல் காரணமாக காலே டெஸ்டில் லோகேஷ் ராகுல் களம் இறங்கவில்லை. கொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்திருந்தார். 2-வது டெஸ்டில இந்தியா பேட்டிங் செய்யவில்லை. இன்று நடைபெற்ற போட்டியில் 85 ரன்கள் எடுத்தார்.

இதற்கு முன் சங்ககரா, எவர்டன் வீக்ஸ், சந்தர்பால், குமார் சங்ககரா, கிறிஸ் வோக்ஸ், ஆண்டி பிளவர் ஆகியோர் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்துள்ளனர்.
Tags:    

Similar News