செய்திகள்

3-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 492 ரன்கள் இலக்கினை நிர்ணயித்தது இங்கிலாந்து

Published On 2017-07-30 15:46 GMT   |   Update On 2017-07-30 17:44 GMT
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 492 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து, பென் ஸ்டோக்ஸின் சதத்தால் 353 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 1175 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்தின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் லோண்ட்-ஜோன்ஸ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் 178 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. ஜென்னிங்ஸ் 34 ரன்னுடனும், வெஸ்ட்லே 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜென்னிங்ஸ் 48 ரன்னிலும், வெஸ்ட்லே 59 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஜோ ரூட் 50 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் 63 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழற்பிற்கு 313 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 491 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 492 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
Tags:    

Similar News