செய்திகள்

2021-ம் ஆண்டில் ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடத்த அனுமதி

Published On 2017-07-26 00:08 GMT   |   Update On 2017-07-26 00:08 GMT
2021-ம் ஆண்டில் ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் செயற்குழு கூட்டம் ரஷியாவில் 2 நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு (2018) பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியையும், 2021-ம் ஆண்டில் ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியையும் இந்தியாவில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு போட்டிகளும் டெல்லியில் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடக்க இருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டில் பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியிலும், 1990-ம் ஆண்டில் ஆண்களுக்கான உலக கோப்பை குத்துச்சண்டை மும்பையிலும், 2010-ம் ஆண்டில் காமன்வெல்த் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியிலும் நடந்துள்ளது.

2 சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்று இருப்பது குறித்து இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய்சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கருத்து தெரிவிக்கையில், ‘இரண்டு பெரிய சாம்பியன்ஷிப் போட்டிகளை அடுத்தடுத்து நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு முதல்முறையாக வழங்கப்பட்டு இருக்கிறது. போட்டி நடத்துவது குறித்து நாங்கள் அளித்த சிறப்பான அறிக்கை இந்த வாய்ப்பை பெற்று தந்ததாக கருதுகிறேன். குத்துச்சண்டை போட்டியில் பெரிய சக்தி கொண்ட நாடாக இந்தியாவை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் எதிர்பார்க்கிறது. இதுபோன்ற போட்டிகளை நடத்துவது நாம் அந்த இலக்கை எட்ட உதவிகரமாக இருக்கும்’ என்றார். மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயலும் வரவேற்பு தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News