செய்திகள்

பெடரர் 15-வது முறையாக ஏடிபி பைனல் தொடருக்கு தகுதிப் பெற்று சாதனை

Published On 2017-07-18 13:57 GMT   |   Update On 2017-07-18 13:57 GMT
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் 15-வது முறையாக ஏடிபி ‘பைனல்’ தொடருக்கு தகுதிப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
டென்னிஸ் அரங்கில் முடிசூடா மன்னனாக சுவிட்சர்லாந்தின் 35 வயதான ரோஜர் பெடரர் திகழ்ந்து வருகிறார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர், 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை பெற்றார்.

நேற்றுமுன்தினம் முடிவடைந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியில சிலிச்சை வீழ்த்தி 8-வது முறையாக விம்பிள்டனை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.

அத்துடன் தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் நவம்பர் மாதம் 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை லண்டனில் நடைபெற இருக்கும் ஏடிபி ‘பைனல்’ தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

ஏடிபி பைனலுக்கு தகுதி பெற்றதன் மூலம் 15 முறை தகுதிப் பெற்ற வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். கடந்த 2002-ல் இருந்து 2015 வரை தொடர்ந்து இடம்பிடித்திருந்தார். 2016-ல் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
Tags:    

Similar News