செய்திகள்

ஜி.எஸ்.டி வரி அமல்: கிரிக்கெட் போட்டி டிக்கெட் கட்டணம் உயருகிறது

Published On 2017-06-30 06:11 GMT   |   Update On 2017-06-30 06:11 GMT
ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் நாளை அமலுக்கு வரும் நிலையில், கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது.
பெங்களூர்:

ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரி நாடு முழுவதும் நாளை அமலுக்கு வருகிறது. இதனால் பல பொருட்கள் விலை உயருகிறது.

அதேபோல் பொழுது போக்கு அம்சங்களுக்கும் சேவை வரி உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் விளையாட்டு போட்டிகளை மைதானத்துக்கு சென்று பார்க்கும் டிக்கெட் கட்டணம் உயருகிறது. அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் நடத்தும் போட்டிக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது.

இதில் இந்திய கிரிக்கெட் வாரியம், ஆக்கி பெடரேசன் போன்ற அமைப்புகள் அடங்கும். இதன்மூலம் மைதானத்துக்கு சென்று கிரிக்கெட் போட்டியை பார்க்கும் டிக்கெட்டுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது.



அதிக வருவாய் ஈட்டும் ஐ.பி.எல். போட்டிக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது. ரூ. 250-க்கு கீழ் உள்ள டிக்கெட்டுகளுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மற்ற விளையாட்டு போட்டி டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.
Tags:    

Similar News