செய்திகள்

தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

Published On 2017-06-21 05:59 GMT   |   Update On 2017-06-21 05:59 GMT
இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது.
சவுதம்டன்:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுகிறது.

இதன்படி இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது. தென்ஆப்பிரிக்க அணி டிவில்லியர்ஸ் தலைமையில் களம் இறங்குகிறது. பாப் டு பிளிஸ்சிஸ் மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இதில் விளையாடவில்லை.

மோர்கன் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியில் அதிரடி சூரர்கள் அதிகம் பேர் இருப்பதால் ரன்வேட்டை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 12 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் தென்ஆப்பிரிக்காவும், 4-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. 
Tags:    

Similar News