செய்திகள்

மும்பை அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்

Published On 2017-05-27 10:00 GMT   |   Update On 2017-05-27 10:00 GMT
மும்பை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர். இந்திய சீனியர் அணியில் 1998-ம் ஆண்டு அறிமுகமானார். இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுக்களும், 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 288 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சுமார் 10 ஆண்களுக்கு மேல் தக்கவைத்திருந்தார்.

இவரை தற்போது மும்பை அணியின் தேர்வுக்குழு தலைவராக மும்பை கிரிக்கெட் சங்கம் நியமனம் செய்துள்ளது. இவர் மும்பை சீனியர் அணி மற்றும் 23 வயதிற்குபட்டோருக்கான அணியின் தேர்வுக்குழு தலைவராக இருப்பார்.

இவருடன் நிலேஷ் குல்கர்னி, ஜடின் பரன்ஜாபே மற்றும் சுனில் மோர் ஆகியோரும் தேர்வுக்குழுவில் உள்ளனர். 19 வயதிற்குட்பட்டோருக்கான தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ராஜேஷ் பவார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News