செய்திகள்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாதுகாப்பு குறித்து ரோனி பிளானகன் பேட்டி

Published On 2017-05-27 03:50 GMT   |   Update On 2017-05-27 03:50 GMT
தீவிரவாதிகளின் நோக்கத்தால் எந்த வகையிலும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் பேட்டியளித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. அங்குள்ள மான்செஸ்டர் நகரில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியானார்கள். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் அளித்த பேட்டியில், ‘தீவிரவாதிகளின் நோக்கத்தால் எந்த வகையிலும் இந்த போட்டிக்கு பாதிப்பு ஏற்படாது என்று நாங்கள் நம்புகிறோம். பொதுமக்கள் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு சந்தேகத்துக்கு உரிய தகவல்கள் எதுவும் கிடைத்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அச்சமின்றி எங்கள் போட்டிக்கு வாருங்கள். போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் பாதுகாப்பு குறித்து கேள்வி எதுவும் எழுப்பவில்லை. பயிற்சிகள் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. வீரர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு சோதனை சற்று அதிகமாக இருக்கும். எனவே பொருட்கள் எதையும் ரசிகர்கள் எடுத்து வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.
Tags:    

Similar News