செய்திகள்

20 ஓவர் கிரிக்கெட்டிலும் டி.ஆர்.எஸ். முறை: ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை

Published On 2017-05-26 07:49 GMT   |   Update On 2017-05-26 07:50 GMT
20 ஓவர் கிரிக்கெட்டிலும் டி.ஆர்.எஸ். முறையை நடைமுறைப்படுத்த ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
லண்டன்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) கிரிக்கெட் கமிட்டியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அந்த கமிட்டியின் தலைவர் அனில் கும்ப்ளே தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை கொண்டுவர பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்) முறை உள்ளது. அதை 20 ஓவர் கிரிக்கெட்டிலும் நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

ஒரு அணிக்கு டி.ஆர்.எஸ். முறையில் 2 வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதை பயன்படுத்தும்போது அணிக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் அந்த வாய்ப்பு குறையும். மாறாக அணிக்கு சாதகமாக முடிவு வந்தால் அந்த வாய்ப்பு அப்படியே இருக்கும்.



இதில் எல்.பி.டபிள்யூ அவுட்டுக்கு டி.ஆர்.எஸ் முறையில் அப்பீல் செய்யும் அணிக்கு பாதகமாக முடிவு வந்தாலும் அந்த வாய்ப்பை குறைக்க கூடாது என்றும் பரிந்துரை செய்து உள்ளது .

களத்தில் ஒழுங்கீனமாக நடக்கும் வீரர்களை வெளியேற்ற நடுவர்களுக்கு அதிகாரம் உள்பட பல பரிந்துரைகளை செய்து உள்ளது. இந்த பரிந்துரைகளை ஐ.சி.சி. ஏற்று கொண்டால் அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும்.
Tags:    

Similar News