செய்திகள்

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 2 தங்கம் வென்ற சாத்தூர் மாணவி

Published On 2017-05-22 07:01 GMT   |   Update On 2017-05-22 07:01 GMT
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 2 தங்க பதக்கம் வென்ற மாணவி சுபஸ்ரீயை சாத்தூர் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் நேரில் சென்று வாழ்த்தினார்.

சாத்தூர்:

சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மீன்ராஜ் என்பவரது மகள் சுபஸ்ரீ. தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு முடித்து 8ம் வகுப்பு செல்லும் சுபஸ்ரீ, சிறு வயதிலிருந்தே ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இதையடுத்து தீவிர ஸ்கேட்டிங் பயிற்சி பெற்ற சுபஸ்ரீ மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றார்.

கடந்த 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மலேசியாவின் மலாகாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பள்ளி மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் 10,12 வயது பிரிவில் பங்கேற்று அவர் விளையாடினார்.

இதில் 500 மீட்டர் தூரத்தை 56 நொடிகளிலும், ஆயிரம் மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களிலும் கடந்து இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றார். தங்க பதக்கம் வென்ற மாணவி சுபஸ்ரீயை சாத்தூர் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் நேரில் சென்று வாழ்த்தினார்.

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நாடார் உறவின்முறை பள்ளிகளின் தாளார்கள் ரவிச்சந்திரன், சவுந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News