செய்திகள்

ஐ.பி.எல்.: ஒவ்வொரு அணிகளும் எத்தனை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தன

Published On 2017-05-21 07:30 GMT   |   Update On 2017-05-21 07:30 GMT
ஐ.பி.எல். சீசன் 10 தொடரில் ஒவ்வொரு அணிகளும் எத்தனை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளன என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். சீசன்-10 கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. சுமார் 47 நாட்கள் கொண்ட இந்த தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் லயன்ஸ் அணி 8 அணிகள் பங்கேற்றன.

ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த மைதானம் மற்றும் வெளியில் என மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதியது. அதனடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடின.

மும்பை, கொல்கத்தா, புனே மற்றும் ஐதராபாத் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின. எலிமினேட்டர் சுற்றுடன் ஐதராபாத் அணி வெளியேறியது. குவாலியைபர்-2 சுற்றுடன் கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது.

இன்று மும்பை - புனே அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

போட்டிகள் அனைத்தும் ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, மொகாலி, கான்பூர், புனே, பெங்களூரு, ராஜ்கோட் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இதற்காக 8 அணிகளும் அங்கும்மிங்கும் என பறந்த சென்றன. இப்படி ஒவ்வொரு அணிகளும் எத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்தன என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18530 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இது டெல்லி டேர்டெவில்ஸ் அணி பயணம் செய்ததை விட இரண்டு மடங்காகும். அத்துடன் உலகின் நீண்ட நேரம் பயணமான நியூசிலாந்து - கத்தாரை விட அதிக தூரமாகும்.

கிங்ஸ் லெவன் பங்சாப் அணி 11936 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது. இது ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றப் பயணம் செய்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதற்காக இந்திய அணி பறந்த தூரத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

குஜராத் லயன்ஸ் அணி 11441 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளது. இது அட்லாண்டிக் வழியாக நியூயார்க் - லண்டன் செல்லும் தூரத்தை விட இரண்டு மடங்கு அதிகமான தூரம் ஆகும்.

மும்பை இந்தியன்ஸ் அணி 11 420 கிலோ மீட்டர் தூரமும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 383 கிலோ மீட்டர் தூரமும், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 9700 கிலோ மீட்டர் தூரமும், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 9655 கிலோ மீட்டர் தூரமும் பயணம் செய்துள்ளன.
Tags:    

Similar News