செய்திகள்

பெங்களூர் அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Published On 2017-04-23 17:02 GMT   |   Update On 2017-04-23 17:02 GMT
ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 132 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொல்கத்தா:

ஐ.பி.எல். தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் பெங்களூர் அணியின் பந்துவீச்சுகளை விளாசி தள்ளினார். இருப்பினும் கேப்டன் கவுதம் கம்பீர் 14(11) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா அணி 5.4 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் 100 ரன்களை எட்டுவதற்கு கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. உத்தப்பா(11), மனிஷ் பாண்டே(15), யூசப் பதான்(8), கொலின்(0) என சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் 19.3 ஓவர்களில் கொல்கத்தா அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய சாகல் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.


இதனையடுத்து 132 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூர் அணி விளையாடி வருகிறது.

Similar News