செய்திகள்

சீனா கிராண்ட் பிரிக்ஸை 5-வது முறையாக கைப்பற்றி லெவிஸ் ஹாமில்டன் அசத்தல்

Published On 2017-04-09 12:09 GMT   |   Update On 2017-04-09 12:09 GMT
பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் சீன கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் 2017 தொடரின் 2-வது கிராண்ட் பிரிக்ஸ் ஆன சீனா கிராண்ட்ஸ் பிரிக்ஸ் பந்தயம் இன்று ஷாங்காய் சர்க்யூட்டில் நடைபெற்றது.

இதில் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 37 நிமிடங்கள், 36.158 வினாடிகளில் கடந்து முதல் இடத்தைப் பிடித்தார். இதுவரை 54 கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஹாமில்டனுக்கு இது ஐந்தாவது சீன கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் பட்டம் ஆகும். பெராரி அணியின் செபஸ்டியான் வெட்டல் 6.250 வினாடிகள் பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 3-வது இடத்தை அடைந்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸில் ஹாமில்டன் 2-வது இடத்தை பிடித்திருந்தார். 3-வது கிராண்ட் பிரிக்ஸ் ஆன பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் 16-ந்தேதி நடக்கிறது.

Similar News