செய்திகள்

டிவில்லியர்ஸ் புதிய சாதனை: கங்குலி சாதனை முறியடிப்பு

Published On 2017-02-25 08:02 GMT   |   Update On 2017-02-25 08:02 GMT
அதிவேகத்தில் 9 ஆயிரம் ரன்னை எடுத்தவர் என்ற புதிய சாதனையை டிவில்லியர்ஸ் படைத்தார். அவர் 13 ஆண்டு கால கங்குலியின் சாதனையை முறியடித்தார்.
வெல்லிங்டன்:

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடந்த ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 85 ரன்கள் எடுத்தார்.

அவர் 5 ரன்னை எடுத்த போது 9 ஆயிரம் ரன்னை தொட்டார். 33 வயதான டிவில்லியர்ஸ் 214 போட்டியில் 205 இன்னிங்சில் விளையாடி 9080 ரன் எடுத்தார்.

இதன்மூலம் அதிவேகத்தில் 9 ஆயிரம் ரன்னை எடுத்தவர் என்ற புதிய சாதனையை டிவில்லியர்ஸ் படைத்தார். அவர் 13 ஆண்டு கால கங்குலியின் சாதனையை முறியடித்தார்.


இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி 2004-ம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் 236 ஒருநாள் போட்டியில் 228 இன்னிங்சில் 9 ஆயிரம் ரன்னை கடந்தார். இது தான் அதிவேக 9 ஆயிரம் ரன்னாக இருந்தது. இதை டிவில்லியர்ஸ் இன்று முறியடித்தார்.

9 ஆயிரம் ரன்னை தொட்ட 18-வது சர்வதேச வீரர், 2-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை டிவில்லியர்ஸ் பெற்றார்.

டிவில்லியர்ஸ் ஏற்கனவே குறைந்த பந்தில் அரைசதம், செஞ்சூரி மற்றும் 150 ரன்னை குவித்து உலகசாதனையை படைத்து இருந்தார். 50 ரன்னை 16 பந்திலும், சதத்தை 31 பந்திலும், 150 ரன்னை 64 பந்திலும் கடந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News